ஆழ்ந்த உளவியல் ஆவணப்படம் உங்கள் எண்ணம் போல உங்கள் வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள்
யார் இந்த ஆட்டோ ராஜா?
யார் இந்த ஆட்டோ ராஜா ? கர்நாடக மாநிலத்தில் ஒரு காலத்தில் மிகவும் ரவுடியாக வலம் வந்து இயேசுவை ஏற்று கொண்டு கர்நாடக மாதர் தெரேசாவாக உயர்ந்தவர் இந்த ஆட்டோ ராஜா
ஒருவரது குணம் எப்படி இருக்கும் என்று தெரியுமா?
முதன் முறையாக ஒருவரை சந்திக்கும் போது, அவர் எப்பேற்பட்டவர் என்பதை முன்பே தெரிந்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். சிலர் ஒருவருடன் பேசும் முன்பே அவரது குணம் எப்படி இருக்கும் என்பதை சரியாக கணிப்பார்கள். அது எப்படி என்று தெரியுமா?
அதற்கு அவர்களின் ஒருசில நடவடிக்கைகள் அல்லது செயல்கள் தான் காரணம்.
கையெழுத்து
ஒருவரின் பெர்சனாலிட்டி அவரின் கையெழுத்திலேயே தெரியும். அதுவும் அவர்கள் எழுதும் விதம் மற்றும் எழுத்துக்களின் அளவைக் கொண்டு சொல்ல முடியும் என்று ஆய்வு ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது. அதில் சிறிய கையெழுத்துக்களைக் கொண்டவர்கள் மிகவும் கூச்ச சுபாவம் உடையவர்களாகவும், கெட்டிக்காரர்களாகவும் இருப்பார்களாம்.
அதுவே பெரிய கையெழுத்துக்களை கொண்டவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பார்களாம். மேலும் யார் ஒருவர் எழுதும் போது அதிக அழுத்தத்தைக் கொடுத்து எழுதுகிறார்களோ, அவர்கள் எதிலும் மிகுந்த அக்கறையுடனும், அழுத்தம் கொடுக்காமல் லேசாக எழுதுபவர்கள் ஒற்றுணர்வு உள்ளவர்களாகவும், மிகவும் சென்சிடிவ்வானவர்களாகவும் இருப்பார்கள்.
நிறம்
அடிக்கடி தேர்ந்தெடுத்து அணியும் உடையின் நிறத்தைக் கொண்டும், ஒருவரைப் பற்றி சொல்ல முடியும். அதில் யார் அதிகமாக கருப்பைப் பயன்படுத்துகிறார்களோ அவர்கள் மிகவும் சென்டிவ்வானவர்கள் மற்றும் எதிலும் அக்கறையுடன் செயல்படுவார்கள்.
சிவப்பு நிற உடைகளை அணிபவர்கள் வாழ்க்கை முழுமையாக வாழ்வார்கள் மற்றும் பிடிவாத குணமுள்ளவர்கள், எடுத்த காரியத்தை முடிப்பதில் தீர்மானமாக இருப்பார்கள். அதுவே பச்சை நிறம் விசுவாசத்தையும், பாசத்தையும் குறிக்கும். நீலம் நிலைமாறாத் தன்மை, சென்சிடிவ் மற்றும் மற்றவர்கள் மீது இரக்க குணம் கொண்டவர்களாக இருப்பர்.
நகங்களைக் கடிப்பது
ஒரு சூழ்நிலையைக் கையாளும் போது நம் உடல் ஒருசில செயல்களை தானாக செய்யும். அதாவது முடியை சுழற்றுவது அல்லது நகங்களைக் கடிப்பது போன்றவை. இச்செயல்களை பொறுமையின்மை, விரக்தி, சலிப்பு மற்றும் அதிருப்தியை வெளிப்படுத்தும்.
அதிலும் நகங்களைக் கடிப்பவர்கள் பரிபூரணத்துவ குணத்துடன் இருக்க விரும்புவார்கள், அதே சமயம் அதிகமாக பதற்றமாவார்கள்.
நேரந்தவறாமை
ஒருவரின் நேரந்தவறாமை குணம் அவரைப் பற்றி கணிக்க உதவும். உதாரணமாக, ஒருவரை சந்திக்க அல்லது இன்டெர்வியூவிற்கு குறித்த நேரத்திற்கு முன்பே சென்றால், அது நம்மீது ஓர் நல்ல அபிப்பிராயத்தையும், நேர்மறை எண்ணங்களையும் உருவாக்கும். அதுவே தாமதமாக சென்றால், அது அவர்களின் மீது எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும்.
கை குலுக்குவது
ஒருவரை சந்திக்கும் போது வணக்கம் சொல்லும் ஓர் முறையான கை குலுக்குவதைக் கொண்டும் அவரது குணத்தைக் கணிக்க முடியும். அதில் ஒருவர் உறுதியுடன் கைகளை இறுக்கமாக குலுக்கினால், அவர் தன்னம்பிக்கை குணமிக்கவர், தொலைநோக்கு பார்வை கொண்டவர் என்பதைக் குறிக்கும்.
அதுவே கை குலுக்கும் போது தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் இருந்தால், அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக உள்ளதாகவும், குறுக்கு வழியில் இலக்குகளை அடைவார்கள் என்பதையும் வெளிக்காட்டும்.
கண்கள்
உங்கள் கண்கள் உங்கள் எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் குணங்கள் என பல விஷயங்களைச் சொல்லும். கருப்பு நிற கண்களைக் கொண்டவர்களை விட, நீல நிற கண்கள் உள்ளவர்கள், எதையும் அவ்வளவு எதில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் மற்றும் பெரும் குடிகார்களாக இருப்பார்கள் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.
அதுமட்டுமின்றி ஒருவருடன் பேசும் போது அவர்களது கண்களைப் பார்த்து பேசாமல் எங்கேயோ பார்த்து பேசினால், அது அவர்களுக்கு சுய-கட்டுப்பாடு குறைவாக இருப்பதை வெளிக்காட்டும்.
Recent Posts
Popular Posts
-
இந்தனை கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டும் அறிந்து கொள்ளுங்கள்
-
நம் கணணியின் இணையவேகம் என்பதை கண்டறிய உதவும் தளங்கள் 1. Speed Test: கணணியின் இணைய வேகத்தை அறிய உலகில் எல்லோராலும் அதிகம் உபயோகப்படுத்த...
-
கணணி மற்றும் இணையம் பல துறைகளை ஆக்கிரமித்து விட்டதுஅந்த வகையில் தொலை க் காட்சியை பலர் இணையத்தில் பார்த்து வருகின்றனர். ஆனால் அதற்கு மென் பொர...
-
இன்று உலகத்தையே ஒரு ஆட்டு ஆட்டிக்கொண்டிருக்கின்ற இஸ்ரேல் என்கின்ற நாடு, சுமார் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளாக, அடிமையாக இருந்த ஒரு நா...
-
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது 100 சதவீதம் உண்மை என நோர்வே உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் விடுதலைப் புலிக...
-
எனது இந்த வியாதிக்கு காரணம் என்ன ? எனது பாவமா? அல்லது எனது முன்வினை பயனா ? இறைவன் என்னை கைவிட்டு விட்டாரா? என பல விதமான கேள்விகள் உங்கள் மனத...
-
PROPHETIC ANOINTING AND THE WORKS OF PROPHETS - PART-3, BY PROPHET VINCENT SELVAKUMAR
-
இன்றைய உலகில் ஏராளமான ஆண்கள் ஆண்மைக் குறைபாடு பிரச்சினையில் சிக்கித்தவிக்கின்றனர். எனினும் ஆண்மைக்குறைபாட்டை எளிய முறையில் குணப்படுத்த முடிய...